Tuesday, August 18, 2015

செவ்வாழைப் பழத்தின் மருத்துவ குணங்கள்

Share it Please

வாழைப்பழம் எண்ணற்ற சத்துக்களும் கொண்டது . வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.
செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில், கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் விட்டமின் சி அதிகம் உள்ளது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மைக் குறைபாடு ஏற்படும்.
எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வர வேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழையைச் சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண்தன்மை சீரடையும்.
கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழைப் பழம் சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழைப் பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.

No comments:

Post a Comment